மதுரை மத்திய சிறை அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கி..!

0 861
மதுரை மத்திய சிறை அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கி..!

மதுரை மத்திய சிறை அருகே குப்பைத் தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கி கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் காலை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள், குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருப்பதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார், சட்டவிரோதமாக துப்பாக்கியை சிறைக்குள் கொண்டு செல்ல முயற்சி நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments