தீ மிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர்கள்.. இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

0 1389
தீ மிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர்கள்.. இருவர் மருத்துவமனையில் அனுமதி..!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் கோயில் தீ மிதி திருவிழாவின் போது, இரு பக்தர்கள் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ஆடிப்பூர விழாவை ஒட்டி நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தீ மிதித்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

அப்போது, கரகம் சுமந்து கொண்டு வேகமாக வந்த நபர் கால் இடறி அக்னி குண்டத்தில் தவறி விழ, அவருடன் சென்ற நபரும் குண்டத்தில் விழுந்தார்.

அக்னி குண்டத்தில் தவறி விழுந்ததில் தீக்காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments