ஆப்கானில் அல்கொய்தா இயக்கத் தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டார்..!

0 1714
ஆப்கானில் அல்கொய்தா இயக்கத் தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டார்..!

அல்கொய்தாவின் தலைவர்களில் ஒருவரான அய்மன் அல்-ஜவாஹிரி ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மூவாயிரம் பேரை பலிகொண்ட 2001ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயல்பட்ட 71 வயதுடைய தீவிரவாதி அல்-ஜவாஹிரியின் தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைக்கப்பட்டிருந்த நிலையில், காபூலில் பதுங்கியிருந்த தீவிரவாதி கடந்த ஞாயிறு காலை சிஐஏ-வின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய அதிபர் ஜோ பைடன், அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதன் மூலம் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து தீவிரவாதிகள் எங்கு மறைந்திருந்தாலும் அமெரிக்கா கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments