2018-ல் கச்சநத்தத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கு : 27 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு..!

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என சிவகங்கை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தண்டனை குறித்த விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
கச்சநத்தம்-ஆவாரங்காடு ஆகிய இரு கிராமத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நள்ளிரவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து, பயங்கர ஆயுதங்களுடன் கண்ணில் பட்டவர்களை வெட்டி சாய்த்தனர்.
இச்சம்பவத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே பலியான நிலையில், வீடுகளை அடித்து நொறுக்கியும் சூறையாடி தப்பியோடினர்.
Comments