நெடுஞ்சாலையை மூழ்கடித்து சென்ற காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 105 பேர் மீட்பு.!

0 794

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் சத்ரு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை மூழ்கடித்து சென்ற காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 105 பேர் மீட்கப்பட்டனர். 

லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சத்ரு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அங்கு விரைந்த போலீசார்-மீட்பு குழுவினருடன், வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

அவர்களில் 80 பேர் மணாலிக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், மீதமுள்ளவர்கள் கோக்சர் மற்றும் சிசுவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments