இறந்த தாயின் உடலை 80 கி.மீ பைக்கில் எடுத்து சென்ற மகன்கள்.!

0 1665

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக ஷஹதோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து, வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டதையடுத்து, மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments