கிரிமினல் ஆகும் அளவுக்கு கோவை மருத்துவர் செய்த செயல் என்ன? CL.. மு.. ஆன சுவாரஸ்யம்..!

0 3438
கிரிமினல் ஆகும் அளவுக்கு கோவை மருத்துவர் செய்த செயல் என்ன? CL.. மு.. ஆன சுவாரஸ்யம்..!

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் முனுசாமி என்பவர் பணிக்கு வராமல்,  வந்தது போன்று முறைகேடாக வருகை பதிவேட்டில் திருத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவரை பணியிடை நீக்கம் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் உள்ள 15 மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ கல்வியாளர்கள் தங்களது கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வசதியாக பயிலரங்கத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் எதிர் கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை குறித்து விசாரிப்பதற்கு ஏற்ற விசாகா குழு அலுவலகத்தையும் திறந்து வைத்து பேசிய அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேலைக்கு முறையாக வராமல் டிமிக்கி கொடுத்த கோவை அரசு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணரான முனுசாமியின் முறைகேட்டை அம்பலப்படுத்தினார்.

தவறு செய்பவர்களுக்கு எப்பொழுது துணை போக மாட்டேன், உண்மையாக இருப்பவர்களுக்கு சாதரண ஊழியனாக இருந்து துணை நிற்பேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

முன்பு அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களின் வருகையை பதிவு செய்ய விரல் ரேகை வைக்கப்படும் பயோமெட்ரிக் முறை அமலில் இருந்தது. கொரோனா பரவலால் அது கைவிடப்பட்டு மீண் டும் பழைய பதிவேடு முறையே அமலுக்கு வந்தது.

இதனால் எளிதாக முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய நிறுவனங்களில் கூட வருகையை பதிவு செய்வதற்காக, தற்போது பயன்பாட்டில் உள்ள, முகத்தை பதிவு செய்யும் பேஸ் டிடக்டர் கருவியை மருத்துவமனையில் பொறுத்தி வருகையை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments