”மழைக்காலம் தொடங்கும் முன் 75 சதவீத மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்” - அமைச்சர் கே.என். நேரு

சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்குள் 75 சதவீத மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்குள் 75 சதவீத மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் ரூ.249 கோடியே 47 லட்சம் செலவில் 570 தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments