கடலுக்கு நடுவில் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம்.. அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை மெரினா கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை மெரினா கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுக்கூற சென்னை மெரினா கடலுக்கு நடுவில் ரூ. 81 கோடி மதிப்பீட்டில் நடுக்கடலில் 134 அடி உயர பேனா வடிவில் நினைவுச்சின்னம் கண்ணாடி நடைப்பாலத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி கோரி தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
Comments