திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் காவலர்களையே தாக்கிய அர்ச்சகர்கள்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதை பயன்படுத்தி கூடுதல் பணம் பெற்றுக்கொண்டு மூத்த குடிமக்கள் செல்லும் பாதையில் பக்தர்களை அர்ச்சகர்கள் அழைத்துச்செல்வதாகவும், இதனை தடுத்த காவலர்கள் மீது அர்ச்சகர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அழைத்துச்செல்லாத அர்ச்சகர் ஒருவரிடம் பக்தர் ஒருவர் வாக்குவாதம் செய்து பணத்தை திரும்ப பெறும் காட்சிகளும் அரங்கேறியுள்ளன.
அர்ச்சகர்களின் இந்த அத்துமீறிய செயல்களை பக்தர்கள் சிலர் படம்பிடித்து சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
Comments