தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

0 8940
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று நீலகிரி, திருப்பூர், தேனி, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழையும், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 3ஆம் தேதியன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அம்மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அன்றைய தினம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments