தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

0 2223

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, ஓ டி டி தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தப்படுவதாக, தெலுங்கு ஃபிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவர் பசீர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் உள்ள 24 சங்கங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments