மாடியில் இருந்து தவறி விழுந்த சகோதரனை மார்பில் தாங்கி காப்பாற்றிய மற்றோரு சகோதரன்

0 3354

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்குட்பட்ட சங்கரம் குளம் என்ற இடத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சகோதரனை கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு சகோதரன் தனது மார்பில் தாங்கி காப்பாற்றிய காட்சிகள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இரு சகோதரர்களும் தங்களது வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது மாடியில் நின்று சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ஷபீக் கால் இடறி கீழே விழுந்தார்.

இதைக்கண்டதும் உடனடியாக சுதாரித்த சாதிக் தனது சகோதரனை மார்பில் தாங்கி காப்பாற்றினார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசி டிவியில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் அதிகாமாக பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments