முறையான பயிற்சி இல்லாமல் காரை ஓட்டிப்பார்க்க முயன்ற நபரால் விபத்து.. ஓடையில் தூக்கி வீசப்பட்டு இருவர் படுகாயம்!

0 8644

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே முறையான பயிற்சி இல்லாமல் காரை ஓட்டிப்பார்க்க முயன்ற  ஒரு நபரின் செயலால் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அங்குள்ள காங்கியானூர் பகுதியில் வசிக்கும் தினேஷ் என்ற 23 வயது வாலிபருக்கு காரை ஓட்டத்தெரியாவிட்டாலும், தனது வீட்டிற்கு வந்த உறவினர்களின் காரை ஓட்டிப்பார்க்க ஆசை ஏற்பட்டது.

ஆனால், முறையான பயிற்சி இல்லாததால் அந்த கார் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா என்ற வாலிபர் மீதும் சிவக்குமார் என்ற மற்றொருவர் மீதும் பலமாக மோதியது.

கார் மோதியதில் இருவரும் அருகில் இருந்த ஓடையில் தூக்கி வீசப்பட்டனர். விபத்தை கண்டு ஓடிவந்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். இந்த விபத்து நேர்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments