கொட்டும் மழையிலும் வடியாத வெள்ளத்திலும் அசராத மக்கள் பணி..! அசத்திய டிராபிக் போலீஸ்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கிய நிலையிலும் தனி ஒருவராய் நின்று போக்குவரத்து போலீஸ்காரர் கடமையாற்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை கொட்டித்தீர்த்த கனமழையால் முக்கிய சாலையில் மழை நீர் முழங்கால் அளவுக்கு வெள்ளம் போல தேங்கியது.
வாகன ஒட்டிகள் அனைவரும் சாலையில் பள்ளம் இருந்தால் என்ன ஆவது? என்று அஞ்சி ஒத்தையடி பாதையில் செல்வது போல அணிவகுக்க தொடங்கினர்
நிற்காத மழையையும் , வடியாத வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் தண்ணீருக்குள் நின்று கடமையாற்றிக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை தைரியமாக பயணிக்க அறிவுறுத்தினார்
கொட்டும் மழைக்கு அஞ்சாமல் , போக்குவரத்து ஸ்தம்பித்து விடக்கூடாது என்று அந்த போலீஸ்காரர் மேற்கொண்ட பணியால் அங்கு போக்குவரத்து முடங்காமல் வாகனங்கள் தொடர்ந்து சென்றது
அணிந்திருக்கிற சீறுடையில் வியர்வை பட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் சில காவலர்களுக்கு மத்தியில் தனது பொறுப்பு மிக்க பணியால் இந்த போக்குவரத்து போலீஸ்காரர் அப்பகுதி மக்களின் மனம் கவர்ந்துள்ளார்.
Comments