காமன்வெல்த் போட்டி : ஆண்கள் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..!

காமன்வெல்த் போட்டி : ஆண்கள் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..!
இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், ஆண்கள் பளு தூக்குதல் போட்டியின் 73 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றார்.
நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இது மூன்றாவது தங்கப்பதக்கமாகும்.
73 கிலோ பளு தூக்குதல் இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட 20 வயது அச்சிந்தா, மொத்தமாக 313 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பதக்கப்பட்டியலில் 3 தங்கம், 2 வெள்ளி உள்பட 6 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Comments