பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளத்துக்கு 320 பேர் உயிரிழப்பு..!

0 886
பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளத்துக்கு 320 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320ஆக அதிகரித்துள்ள நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பார்வையிட்டார்.

கடந்த 5 வாரங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன.

இதுவரை அந்த மாகாணத்தில் 46 சிறுவர்கள் உள்பட 127 பேரும், கராச்சி, சிந்து மாகாணங்களில் 70 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments