சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றின் மறுகரையில் சிக்கிய 11 மாணவர்கள்.. கரை திரும்ப முடியாமல் தவிப்பு..!

சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றின் மறுகரையில் சிக்கிய 11 மாணவர்கள்.. கரை திரும்ப முடியாமல் தவிப்பு..!
மேற்குவங்கத்தில் சுற்றுலா சென்ற போது பாலசோன் ஆற்றின் மறுகரையில் சிக்கிய 11 கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
டார்ஜிலிங்கின் துதியா பகுதியில் உள்ள பாலசோன் ஆற்றைக் கடந்து மலைப்பகுதிக்கு மாணவர்கள் சுற்றுலா சென்றனர்.
அப்போது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், மாணவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மாணவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
Comments