அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு... கடைசி நாளில் 63 லட்சத்திற்கும் அதிகமான ஐடி ரிட்டன்ஸ் தாக்கல்

0 1138

2021-2022ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கை அபராதமின்றி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 5 கோடியே 74 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடைசி நாளில் மட்டும் 63 லட்சத்து 47 ஆயிரம் பேர் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். இதில், கடைசி ஒரு மணிநேரத்தில் மட்டும் 4 லட்சத்து 60 ஆயிரத்து 496 பேர் கணக்கை சமர்ப்பித்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்கள், அபராதத்துடன் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் தாக்கல் செய்யலாம்.

ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாயும், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments