ரூ.59 லட்சம் ரொக்கம் எடுத்துச் சென்ற வழக்கு.. ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு..!

ரூ.59 லட்சம் ரொக்கம் எடுத்துச் சென்ற வழக்கு.. ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு..!
உரிய ஆவணங்கள் இல்லாமல் 59 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நேற்று ஒரு காரில் சோதனை செய்த போலீசார், அதிலிருந்து கட்டுகட்டுகாக 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததோடு, அதில் வந்த ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நமன் பிக்சல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்று மூன்று எம்எல்ஏக்களின் ஜாமின் மனுக்களை ஹவுரா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Comments