44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1323
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

3ஆம் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்ற நிலையில், அரங்கில் போட்டிகளை அவர் பார்வையிட்டுச் சென்றார். மேலும், வீரர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், உணவுகள் ஆகியவை குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதனிடையே, ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியான ராண்டா சேடருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments