கார் மோதியதில் நெடுஞ்சாலையில் கீழே விழுந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்

0 1793
கார் மோதியதில் நெடுஞ்சாலையில் கீழே விழுந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்

கேரளத்தில் கார் மோதியதில் நெடுஞ்சாலையில் கீழே விழுந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி முற்றிலும் எரிந்துபோனது.

திருச்சூரில் இருந்து எர்ணாக்குளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருவர் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.

இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த இருவரும் இலேசான காயங்களுடன் உயிர்தப்பினர். சாலையில் உரசியதால் இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது.

தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தபோதும் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து கூடானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments