ஐ.ஐ.டி வளாகத்தில் தனியாக சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை ; போலீசார் தீவிர விசாரணை

ஐ.ஐ.டி வளாகத்தில் தனியாக சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை ; போலீசார் தீவிர விசாரணை
சென்னை ஐ.ஐ.டி., மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு சைக்கிளில் சென்ற மாணவிக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மாணவி கூச்சலிட்டும் யாரும் வராததால் அந்த நபருடன் சண்டையிட்டு மாணவி தன்னை காப்பாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மாணவியின் நண்பர் அளித்த புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், முதற்கட்டமாக, ஐஐடி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் 300க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களின் புகைப்படங்களை மாணவியிடம் காண்பித்தனர்.
சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் மாணவியால் அந்த நபரை அடையாளம் காட்ட முடியவில்லை. இது குறித்து ஐஐடி நிர்வாகத்திடம் போலீஸ் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
Comments