காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்கம்
இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் 67 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுன்கா தங்கப்பதக்கம் வென்றார்.
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான ஜெரிமி ஸ்நாட்ச் முறையில் 140 கிலோவும், கிளின் அன்ட் ஜெர்க் முறையில் 160 கிலோவும் தூக்கி இந்தியாவுக்கு 2-வது தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.
Comments