உலகையே அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை.!

0 3254

பணவீக்கம், அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பாதிப்புகள் காரணமாக உலகம் முழுவதும் விரைவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையில், தனிநபர்கள் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான 8 வகையான  வழிகளை பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாவது வருமானத்துக்கும் செலவுக்குமான வரவுசெலவு அறிக்கையை தயாரித்து, தேவையற்ற செலவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வேலைஇழப்பு காலத்திலும், ஊதிய குறைப்பை சமாளிக்கும் வகையில் அவசரகால நிதியாக குறைந்தபட்சம் 3 மாத ஊதியத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

கிரிடிட் கார்ட் உள்ளிட்ட அதிக வட்டியுடைய கடன்களை குறைக்கவும், வேலை இழப்பை தவிர்க்கும் வகையில் கூடுதல் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட், கேபிள் டிவி, வாராந்திர மளிகை சாமான்கள் உள்ளிட்ட செலவினங்களில் தேவையற்றதை நீக்கவும் ஓய்வூதியம் உள்ளிட்ட முதலீடுகளில் தொடர்ந்து முதலீடு செய்யவும் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் பொருளாதார முதலீடுகளை பங்குகள், ரியல் எஸ்டேட் என பிரித்து முதலீடு செய்யவும், பொருளாதார மந்த நிலை காலத்தில் குறைந்த விலைக்கு வரும் கார்கள், வீடுகளை வாங்கவும், விலை குறைந்த பங்குகளை வாங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments