அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் சென்ற கார் கவிழ்ந்து விபத்து.!

0 2815

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாசலம் சென்ற கார் நள்ளிரவில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த 27ம் தேதி சென்னை வருவதற்காக எம்.எல்.ஏ வெங்கடாசலம், தனது காரில் ஓட்டுநர் கார்த்திக் மற்றும் மற்றோரு நபருடன் ஈரோடு ரயில் நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் வந்த போது மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில், வளைவில் திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் எம்.எல்.ஏ வெங்கடாசலத்திற்கு விலா எலும்பு, தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments