மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய கணவர் உள்பட 4 பேர் கைது.!

0 8265

இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில், மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனது நண்பருடன் மனைவியை கண்ட கணவர், அவரை மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கிய நிலையில், அவரது நண்பரையும் மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் விசாரணை நடத்தினர்.

சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் வலியால் அலறித்துடித்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments