ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து கன்னத்தில் அறைந்த சீனியர்கள்.!

0 2342

மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்லம் மருத்துவக்கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் கன்னத்தில் அறைந்து ராகிங் செய்தது குறித்து விசாரணை நடத்த, அம்மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் உத்தரவிட்டுள்ளார்.

ரத்லம் கல்லூரியின் விடுதியில் தலைகுனிந்தபடி நீண்ட வரிசையில் நின்ற ஜூனியர் மாணவர்களின் கன்னத்தில், சீனியர் மாணவர்கள் பலர் அறைந்த காட்சி இணையத்தில் பரவியது.

இதுகுறித்து முழு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிட்ட நிலையில், ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை 6 மாதம் இடைநீக்கம் செய்ய கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments