ரஷ்ய படைகள் வசமுள்ள பகுதிகளில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்.. 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் பலியானதாக உக்ரைன் ராணுவம் தகவல்!

0 2390

ரஷ்ய படைகள் வசமுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நகரமான கெர்சனில் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் ராணுவம் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில், 100-க்கும் மேற்பட்ட ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 7 பீரங்கி வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. எனினும், இந்த தாக்குதல் குறித்து ரஷியா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments