தொழிலதிபர் அவினாஷிடமிருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பறிமுதல்.!

34,614 கோடி ரூபாய் வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக புனேவை சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து DHFL குழுமம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அண்மையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஏபிஐஎல் குழும நிறுவனர் அவினாஷ் போசலே,
DHFL மற்றும் ரேடியஸ் குழுமத்திலிருந்து முறைகேடாக பெறப்பட்ட நிதி மூலம் இங்கிலாந்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments