லாட்வியாவுக்கு எரிவாயு வழங்கலை நிறுத்தியது ரஷ்யா.!

0 2650

லாட்வியாவுக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ரஷ்யாவின் கேஸ்புரோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போருக்குப்பின் எரிவாயுக்கான விலையை யூரோவாகத் தராமல் ரூபிளாகத் தர வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா நிபந்தனை விதித்தது. இதற்கு உடன்படாத பல்கேரியா, பின்லாந்து, போலந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியது.

இதேபோல் கொள்முதல் நிபந்தனையை மீறியுள்ளதாகக் கூறி லாட்வியாவுக்கு எரிவாயு வழங்குவதை ரஷ்யாவின் கேஸ்புரோம் நிறுவனம் நிறுத்தியுள்ளது. மொத்த எரியாற்றல் தேவையில் 26 விழுக்காட்டை எரிவாயு மூலம் பெறும் லாட்வியா அதன் இறக்குமதிக்கு ரஷ்யாவைச் சார்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments