வாடிக்கையாளர் போன்று வாட்ஸ் அப்-ல் வீடியோ அனுப்பி போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர்.!

0 3200

சென்னையில், வாடிக்கையாளர் போன்று வாட்ஸ் அப்-ல் வீடியோ அனுப்பி 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்த காவல்துறை, இருவரை கைது செய்தது.

மதுரவாயலைச் சேர்ந்த வெங்கடேஷ் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை விற்பதாக தகவல் கிடைத்த நிலையில், வாடிக்கையாளர் போன்று அவரை தனிப்படை காவல்துறையினர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டனர்.

அவர் ஒரு கிலோ போதைப் பொருளுக்கு 6 லட்சம் ரூபாய் கேட்டதோடு, பணத்தை செய்திதாளில் சுற்றி, அதன் மேல் CASH எழுதுமாறு கூறி அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு கூறியிருக்கிறார்.

பதிலுக்கு வெங்கடேஷ், தன்னிடம் உள்ள மெத்தபெட்டமைன் போதை பொருளை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கிறார். போதைப்பொருளை நேரில் கொடுக்க ராயபுரம் வந்த வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளி சிவசந்திரன் ஆகியோரை கைது செய்த காவல்துறை மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments