காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

0 2122

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஒரே நாளில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.

பிர்மிங்காம் நகரில் நடந்த பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சங்கேத் சர்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார். மகராஷ்டிராவை சேர்ந்த 21 வயதான சங்கேத், இறுதிச்சுற்று ஆட்டத்தில் 248 கிலோ எடைத்தூக்கி 2ஆம் இடம் பிடித்தார்.

அதேபோல், பளுதூக்குதல் போட்டியின் 61 கிலோ எடைப்பிரிவில் கர்நாடகாவைச் சேர்ந்த குருராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்று ஆட்டத்தில் மொத்தம் 269 கிலோ எடைத் தூக்கி குருராஜ் இந்தியாவிற்கு பதக்கம் பெற்றுத்தந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments