மேட்டூர் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த விவகாரத்தில், வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்

0 1956

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த விவகாரத்தில், வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அடுத்த ஆலமரத்துப்பட்டியில் கடந்த 24ஆம் தேதி வனப்பகுதியில் இருந்து உணவு தேடி ஊருக்குள் வந்த ஆண் காட்டு யானை, விவசாய தோட்டத்தில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து, விவசாயி புஷ்பநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலப் பகுதிகளில் குறைந்த மின்சாரம் மட்டுமே பாய்ச்சப்படுகிறதா என கண்காணிக்காமல், கவனக்குறைவாக செயல்பட்டதாக மேட்டூர் வனச்சரக அலுவலர், வனவர், வனகாப்பாளர், வனக்காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments