பெரம்பலூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி அரசுப் பேருந்து விபத்து..! ஓட்டுநர், நடத்துநர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து இரும்பு பைப்புகளை ஏற்றிய லாரி, பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சென்னையிலிருந்து-திருச்சி நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற லாரியை கடந்து செல்ல முற்பட்ட நிலையில், அந்த வழித்தடத்தில் மற்றொரு வாகனம் திடீரென வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, இரும்பு பைப்புகளை ஏற்றி சென்ற லாரியின் பின் பகுதியில் அதி வேகமாக மோதி சிக்கிக்கொண்டு சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது..
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் தேவேந்திரன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments