காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

0 2449

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

பர்மிங்காம் நகரில் நடந்த பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சங்கேத் சர்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார். மகராஷ்டிராவை சேர்ந்த 21 வயதான சங்கேத், இறுதிச்சுற்று ஆட்டத்தில் மொத்தம் 248 கிலோ எடைத்தூக்கி 2ஆம் இடம் பிடித்தார்.

அப்போட்டியில் 249 கிலோ எடைத் தூக்கி மலேசியாவின் அனிக் கஸ்டன் தங்கம் வென்றார். சங்கேத் சர்கருக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவர் வெள்ளி வென்றது காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments