பட்டப்பகலில் முன்னாள் ராணுவ வீரர் சரமாரியாக வெட்டிக்கொலை.!

0 3565

தேனி மாவட்டம் போடியில், பட்டப்பகலில் முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேல சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராதாகிருஷ்ணன், தற்போது லாட்ஜ் நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, தேனி தலைமை தபால் நிலையம் அருகே அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தேனி மாவட்ட எஸ்.பி., தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments