பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் கைது.!

0 2623

பொள்ளாச்சியில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அரசு பள்ளி மாணவி ஒருவர், தான் பயிலும் பள்ளியில் 12ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரனும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணனும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் சைல்டு ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தார்.

இது குறித்து மாணவியிடம் நேரில் விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழுவினர், ஆசிரியர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments