திருப்பத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவனை கைது செய்த மத்திய புலனாய்வு துறையினர்.!

0 36421

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவனை மத்திய புலனாய்வு துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் நீலிகொல்லை பகுதியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவன் அனாஸ் அலியை 10 பேர் கொண்ட மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.

மேலும், அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேலூர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதாகியுள்ள அனாஸ் அலி, லண்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இணையதளம் மூலம் பேசியதாக கூறப்படும் நிலையில், அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments