எளிதாகத் தொழில் செய்வது, எளிதாக வாழ்வது போன்று எளிதாக நீதி கிடைப்பது முதன்மையானது - பிரதமர் நரேந்திர மோடி

0 1557

எளிதாகத் தொழில் செய்வது, எளிதாக வாழ்வது போன்று எளிதாக நீதி கிடைப்பதும் முதன்மையானது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் தேசியச் சட்டப்பணிகள் ஆணையம் ஏற்பாடு செய்த அனைத்திந்திய மாவட்டச் சட்டப் பணிகள் ஆணையங்களின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நினைவுப் பரிசு வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மின் நீதிமன்றங்கள் திட்டத்தில், மெய்நிகர் நீதிமன்றங்கள் இந்தியாவில் தொடங்கப்படுவதாகவும், போக்குவரத்து விதிமீறல் போன்ற குற்றங்களை விசாரிக்க 24 மணி நேர நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றங்களில் காணொலி மூலம் வழக்கை விசாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எந்தச் சமூகத்துக்கும் நீதித்துறையை அணுகுவது எவ்வளவு முதன்மையானதோ, நீதி வழங்கலும் அதே அளவு முதன்மையானது என்றும், அதற்கு நீதித்துறை உட்கட்டமைப்பு முதன்மைப் பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த எட்டாண்டுகளில் இந்தியாவில் நீதித்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் விரைந்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். எளிதாகத் தொழில் செய்வது, எளிதாக வாழ்வது போல எளிதாக நீதி கிடைப்பதும் முதன்மையானது எனத் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நமது நாட்டின் உண்மையான வலிமை இளைஞர்கள் தான் என்றும், உலகில் உள்ள இளைஞர்களில் ஐந்தில் ஒருபங்கினர் இந்தியாவில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் உழைப்பாளர்களில் திறன்மிகு தொழிலாளர்கள் மூன்று விழுக்காடு அளவுதான் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான மக்களுக்கு நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் மாவட்ட நீதிபதிகள் என்றும், அவர்களுடனான அனுபவமே நீதித்துறை குறித்த பொதுமக்களின் கருத்தாக இருக்கும் என்பதால் மாவட்ட அளவில் நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments