கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறை!

0 2545

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மூக்கன் என்பவரது பெட்டிக்கடைக்கு சென்ற 5 நபர்களில், ஒருவர் பளபளக்கும் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து சிகிரெட் கேட்டுள்ளார். அது கள்ளநோட்டு என்பதை அறிந்த கடைக்காரர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்த நிலையில், உடனடியாக அங்கு வந்து போலீசார் 5 பேரையும் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கள்ளநோட்டு அச்சடிக்கும் கும்பல் என்பதும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டை அச்சடித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அச்சடிக்கப்பட்ட 1 லட்சத்து 38 ஆயிரம் 500 ரூபாய் நோட்டுகளையும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர், பிரிண்டர், உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments