நீலகிரி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு..!

நீலகிரி மாவட்டத்தில், கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் 83 இடங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 14 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
மேலும், அவர்களிடம் இருந்து 5 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 18 காசோலை மற்றும் 11 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், கந்து வட்டி வசூல் செய்ய பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Comments