ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காய்ச்சிய கூழில் தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு!

0 4049

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கும் பொருட்களை வைத்து கூழ்காய்ச்சி அம்மனுக்கு படைத்து பூஜைகள் முடிந்த பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

அதற்காக சுமார் 6க்கும் மேற்பட்ட பெரிய அண்டாவில் முத்துக்குமார் என்கின்ற முருகன் என்பவர் சில பக்தர்களுடன் கூழ் காய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ் அண்டாவில் தவறி விழுந்ததில் உடல் முழுவதும் வெந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments