அமீரகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத பலத்த மழை பதிவு: 7 பேர் உயிரிழப்பு... ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்!

0 3268

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கன மழை காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச மழை அளவு பதிவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 800 பேர் மீட்கப்பட்டு ஷார்ஜாவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆசியாவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேறிய 80 சதவீதப் பேர் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments