திரைப்படப் படப்பிடிப்பு செட்டில் பயங்கர தீ விபத்து

0 2919

மும்பை அந்தேரி பகுதியில் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகப் போடப்பட்டிருந்த செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சுமார் ஆயிரம் சதுர அடி கொண்ட பரப்பில் தீ முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்பட்டது.

பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர்.

ஒருவழியாக தீ அணைக்கப்பட்டு அங்கு காயம் அடைந்த 25 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 32 வயது வாலிபர் ஒருவரின் உயிரற்ற சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments