நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து..!

0 3827
நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து..!

பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தன்னை தாக்கியதாகவும் அவதூறாக பேசியதாகவும் நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, தாக்குதல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, அதனை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments