சர்வே எண்ணை மாற்ற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயர் முத்துப்பாண்டி கைது..!

0 2286
சர்வே எண்ணை மாற்ற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சர்வேயர் முத்துப்பாண்டி கைது..!

மதுரை தெற்கு வட்டார அலுவலத்தில் பணியாற்றும் சர்வேயர் முத்துப்பாண்டியை லஞ்சப்பணம் பெறும் போது கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

முனிச்சாலை பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் சர்வே எண்ணை மாற்றி தர  சர்வேயர் முத்துப்பாண்டி 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால்  ரமேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவிக்கவே, ரசாயனம் தடவப்பட்ட பணம் கொடுத்து அனுப்பப்பட்டது.

இந்த பணத்தை ரமேஷிடம் இருந்து சர்வேயர் முத்துப்பாண்டி பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments