செஸ் ஒலிம்பியாட் : முதல் நாளில் இந்திய வீரர்கள் அபாரம்..!

0 4099
செஸ் ஒலிம்பியாட் : முதல் நாளில் இந்திய வீரர்கள் அபாரம்..!

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் நாளில் இந்திய ஆடவர் அணியின் வீரர்கள் ஏ,பி,சி என மூன்று அணிகளாக களம் இறங்கினர். ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் எதிரணியைச் சேர்ந்த நான்கு வீரர்களை எதிர்கொண்டனர்.

இந்திய ஏ அணியினர் ஜிம்பாவே அணியுடன் விளையாடினர். விதித், அர்ஜூன், நாராயணன் மற்றும் சசிகிரண் ஆகியோர் அடங்கிய இந்திய ஏ அணி, 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜிம்பாப்பே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய பி அணியினர் ஐக்கிய அரபு அமீரக அணியுடனும் மோதினர். குகேஷ் ரவுநத் சத்வாணி, அதிபன், நிகில் சரின் ஆகியோர் இடம்பெற்ற இந்திய பி அணியினர் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் அமீரக அணியை வெற்றி கண்டனர்.

அதே போன்று அபிஜித், கார்த்திகேயன், அபிஜித் குப்தா, அபிமன்யூ ஆகிய 4 இந்திய வீரர்கள் இடம்பெற்ற சி அணியினர், 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு சூடான் அணியை வீழ்த்தி வாகைசூடினர்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் மூன்று அணியினரும் தங்களின் எதிர் அணியினரை முழுமையாக வீழ்த்தி வெற்றி கண்டனர்.

பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஏ,பி மற்றும் சி அணியினர் தங்கள் எதிர்கொண்ட அணியினரை முழுமையாக வீழ்த்தினர். பெண்கள் பிரிவின் ஏ அணியினர் 3-0 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றனர்.

இந்திய பெண்கள் பி அணியானது வேல்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்றுள்ளது. பெண்கள் பிரிவின் சி அணி ஹாங்காங் அணியுடன் மோதி 4 வெற்றிகளுடன் இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments