20 மாதங்களில் 6 முறை விபத்துக்குள்ளான மிக்-21 விமானங்களை கைவிடும் விமானப் படை..!

0 2153
20 மாதங்களில் 6 முறை விபத்துக்குள்ளான மிக்-21 விமானங்களை கைவிடும் விமானப் படை..!

தொடர் விபத்துகளை சந்திப்பதால் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக்-21 ரக போர் விமானங்களைபடிப்படியாக படையிலிருந்து நீக்கிவிடுவது என இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.

1962 ஆம் நடைபெற்ற சீன போர் மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் காரணமாக ராணுவத்தை வலுப்படுத்த இந்தியா முடிவு செய்தது. அதன்படி சோவியத் ரஷ்யாவிடமிருந்து 1963 ஆம் ஆண்டு முதல் ஒற்றை என்ஜின் மிக்-21 விமானத்தை இந்தியா வாங்கியது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தகவலின்படி, இந்தியாவில் 1,200 மிக் ரக விமானங்கள் படையில் இருந்த நிலையில், அவை தொடர் விபத்துகளை சந்தித்தன.

2012 ஆம் ஆண்டு மக்களவையில் பேசிய அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய 872 மிக்-21 விமானங்கள் விபத்துக்குள்ளானதாகவும், விமானிகள் பொதுமக்கள் என 200 பேர் உயிரிழந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் , 2025 ஆம் ஆண்டுக்குள் மிக்-21 விமானங்களை படையிலிருந்து விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீநகர் விமானப் படை தளத்தில் உள்ள மிக்-21 விமானம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் கைவிடப்படுகிறது.  இதன்பிறகு மூன்று மிக்-21 ரக விமானங்கள் மட்டுமே படையில் இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments