700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு..!

ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமியை ராணுவ வீரர்கள் முழு மூச்சுடன் செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளனர்.
சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று காலை வயலில் விளையாடி கொண்டிருந்த சிறுமி, அங்குள்ள 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.
சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமிக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு மீட்புப் பணி முழுவீச்சில் நடைபெற்றதை அடுத்து வெறும் 3 மணிநேரத்திலேயே சிறுமியை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments